வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (13:37 IST)

காஷ்மீரில் இணையத்தள முடக்கத்தை திரும்பப்பெற ஒரு வாரத்தில் பரீசிலிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம் கறார்

ஜம்மு காஷ்மீரில் இணையத்தள முடக்கம் நிலவி வரும் நிலையில் முடக்கத்தை திரும்பப்பெற ஒரு வாரத்தில் பரீசிலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்து மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதிகள் பதற்றம் நிலவியது. பதற்றத்தை கட்டுபடுத்த செல்ஃபோன் டவர்களை தடை செய்தல், இணையத்தள சேவையை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இணையத்தள முடக்கத்தை திரும்பப்பெறுவது பற்றி ஒரு வாரத்தில் பரீசிலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இணையத்தளம் மூலம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் தனிமனிதனின் அடிப்படை உரிமை எனவும் தெரிவித்துள்ளது.