புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (12:59 IST)

”தர்பார் படம் போலீஸை கொச்சைப்படுத்துகிறது..” நீதிமன்றத்தில் புகார்

சீருடை பணியாளர்களின் மனதை புண்படுத்தும் வகையில் தர்பார் திரைப்படம் அமைந்துள்ளதாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் புகார்

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நேற்று வெளிவந்த தர்பார் திரைப்படம், உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சீருடை பணியாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக தர்பார் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ், ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் முன்னாள் சி.ஐ.எஸ்.எப் வீரர் மரியமைக்கேல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அப்புகாரில் “நான் போலீஸ் இல்ல, ரவுடி” என ரஜினிகாந்த் பேசும் வசனத்தை ம்யூட் செய்யவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.