புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (17:23 IST)

சபாக் திரைப்படத்திற்கு வரிவிலக்கு..

தீபிகா படுகோன் நடித்து நாளை வெளிவரவுள்ள சபாக் திரைப்படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான “சபாக்” திரைப்படத்தில் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா படுகோனும் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் நாளை (ஜனவரி 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சபாக் திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மத்திய பிரதேச அரசு வரி விலக்கு அளித்துள்ளது. இதனிடையே ஜேஎன்யூ மாணவர்களின் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தீபிகா படுகோன் கலந்து கொண்டு ஆதரவு அளித்ததால் பலர் “சபாக்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் டிவிட்டர்ல் சபாக் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததாக ஒரே டிக்கெட்டை பலரும் தான் கேன்சல் செய்த டிக்கெட் போல் பகிர்ந்தது கேலிக்குள்ளாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.