தொடர்புடைய செய்திகள்
- சென்னை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்குமா? தெற்கு ரயில்வே விளக்கம்..!
- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: ரயில்வே துறையிடம் திமுக கோரிக்கை..!
- மதுரையில் மெட்ரோ ரயில்.. ரூ.3 கோடிக்கான டெண்டர் வெளியீடு..!
- நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு..!
- மதுரை – திருவனந்தபுரம் ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
தண்டவாளம் அருகே குறும்பட படப்பிடிப்பு.. ரயில் மோதி பரிதாபமாக இருவர் பலி..!
ரயில் தண்டவாளம் அருகே குறும்படத்தின் படப்பிடிப்பு எடுத்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராமல் ரயில் மோதியதால் படக்குழுவினர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியில் உள்ள காந்திநகர் மேம்பாலம் அருகே நேற்று இரண்டு இளைஞர்கள் மொபைல் போனில் குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது குறும்படம் எடுத்துக் கொண்டிருந்த ஆர்வத்தில் ரயில் வருவதை கவனிக்காத அவர்கள் மீது ரயில் மோதியதை அடுத்து சம்பவ இடத்திலேயே பலியாகினார். இது குறித்து காவல் துறையினர் விரைந்து சென்று இருவர் உடலையும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து அவர்கள் வைத்திருந்த மொபைலில் இருந்து அவர்கள் இருவரும் மொபைல் போனில் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அனுமதியின்றி ரயில் தண்டவாளத்தில் குறும்படம் எடுத்த இருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
