திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (09:04 IST)

மதுரை – திருவனந்தபுரம் ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!

Train
மதுரை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள இணைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மதுரை – திருவனந்தபுரம் ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதனால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிப்ரவரி 27ம் தேதியன்று திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை புறப்படும் அம்ரிதா விரைவு ரயில் (16343) திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அதேபோல 28ம் தேதி மறுமார்க்கமாக மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக மாலை 5.05 மணிக்கு திண்டுக்கலில் இருந்து அம்ரிதா விரைவு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K