ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (17:19 IST)

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: ரயில்வே துறையிடம் திமுக கோரிக்கை..!

Karunanidhi
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என ரயில்வே துறையிடம் திமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்ன திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
புறநகர் பகுதியில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் சேவை வசதி மற்றும் அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் கழிப்பிட வசதி மேம்படுத்த வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
Edited by Siva