ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (19:41 IST)

நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு..!

Train
நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
 
 தென்னக ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தென் மாவட்டங்களில் இருந்து ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சிறப்பு ரயில் ஏப்ரல் 6  முதல் ஜூன் 29 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில், மாலை 7 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். கோடை விடுமுறையை ஊட்டியில் கழிக்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
 
Edited by Siva