1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. After Chennai, madurai metro works starts

மதுரையில் மெட்ரோ ரயில்.. ரூ.3 கோடிக்கான டெண்டர் வெளியீடு..!

metro
சென்னையை அடுத்து மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ரூபாய் மூன்று கோடி செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் தற்போது இரண்டாவது மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை மதுரை மற்றும் கோவை மக்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் சென்னையை தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ரூபாய் மூன்று கோடி செலவில் டெண்டர் போடப்பட்டுள்ளது.
 
120 நாட்களில் இந்த டெண்டர் தயாரிக்க வேண்டும் என காலகடு விதிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
குழந்தையை பிரசவித்த கையோடு ஆம்புலென்சில் சென்று பொதுத் தேர்வு எழுதிய இளம்பெண்