1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. petrol bunk association decided to stop upi transaction

இனிமேல் பெட்ரோல் பங்குகளில் G-Pay-வுக்கு தடை?!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

petrol diesel
தற்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் எங்கு சென்றாலும் Google Pay, PhonePe மூலம் பணத்தை செலுத்தி விடுகிறார்கள். ஏடிஎம்க்கு சென்று பணத்தை எடுத்து பணமாக கொடுப்பதெல்லாம் தற்போது பெரும்பாலும் குறைந்துவிட்டது. இந்நிலையில்தான் பெட்ரோல் பங்குகளில் Google Pay, PhonePe போன்ற ஆப் மூலம் UPI பணப்பரிவர்த்தனைகளை நிறுத்தலாம் என்கிற முடிவுக்கு பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

மணி மியூல் மோசடி தொடர்பாக 800க்கு மேற்பட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலிய வணிகர்களும் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.. அதாவது, ஆன்லைன் மூலம் பண மோசடி செய்பவர்கள் பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்தும்போது சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்கிறார்கள். அப்போது, அதனுடன் தொடர்பு இல்லாத பங்க் உரிமையாளர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவேதான், இனிமேல் பெட்ரோல் பங்குகளில் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதை நிறுத்தி விடலாம் என்கிற முடிவுக்கு பெட்ரோலிய வணிக சங்கம் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.
 பலரும் டிஜிட்டல் பரிவர்த்தணைக்கு பழகிவிட்ட நிலையில் இது நடைமுறையில் அது பல சிக்கல்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய்யால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு கமல் ஆதரவு.. இது தொடர வேண்டும் என விருப்பம்..