1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. nirmala sitaraman says ups is free

UPI மூலம் பணம் அனுப்ப கட்டணமா?!.. பரவும் செய்தி!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!...

google pay
கடந்த சில வருடங்களாகவே Google Pay, PhonePe போன்ற செல்போன் ஆப்கள் மூலம் தங்களின் வங்கி கணக்குகளின் UPI கணக்கை பயன்படுத்தி மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்பும் பழக்கம் மக்களிடம் அதிகரித்திருக்கிறது.

தற்போது பெரும்பாலானோர் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால் இந்த UPI கணக்கை பலரும் பயன்படுத்துகிறார்கள். Google Pay, Phonepe மட்டுமில்லாமல் அமேசான் உள்ளிட்ட பல ஆப்கள் மூலமாகவும் UPI கண்க்கை பயன்படுத்தி பணம் அனுப்பும் வசதிகள் வந்துவிட்டது.

இந்நிலையில்தான், UPI மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவியது. பொது மக்கள் மத்தியில் இந்த செய்தி பரவியதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.  இந்நிலையில் இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுனர் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

அதன்படி 2 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சில UPI பரிவத்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் கொண்டு வருவது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். ஆனால் வாடிக்கையாளர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. UPI  எப்போதும் போல இலவசமாகவே தொடரும்’ என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாஜக என்னை சரியா யூஸ் பண்ணல!.. ஜெயலலிதா சீட்டுக்கு ஆசைப்படும் குஷ்பு!...