1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Microsoft Server Outage Disrupts Flight Services in New Delhi

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் பாதிப்பு...

மைக்ரோசாஃப்ட் முடக்கம்
உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தகவல் தொழில்நுட்பச் சேவைகள் முடங்கியுள்ளன. அவுட்லுக், டீம்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் 365 செயலிகள் முடங்கியதால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அலுவலக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
 
இந்த தொழில்நுட்பக் கோளாறு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாஃப்ட் சர்வர் முடக்கம் காரணமாக டெல்லியிலிருந்து இயக்கப்படவிருந்த மூன்று விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
 
இதன்படி, டெல்லியிலிருந்து புனே, லே மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தர்பங்கா மற்றும் மும்பை புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற முன்னணி விமான நிறுவனங்களும் பயணிகளின் மின்னஞ்சல்களை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. 
 
எனினும் விமான சேவைகள் வழக்கம்போல் தொடர்வதாகவும், பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன் தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இந்த திடீர் சர்வர் முடக்கம் விமான பயணிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
திடீரென வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சோனம் வாங்சுக்.. என்ன காரணம்?