1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. pothy tree systems bought a2b

ரூ.1600 கோடிக்கு கைமாறிய அடையார் ஆனந்த பவன் (A2B)!..

a2b
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அடையாறு ஆனந்த பவன் (A2B) செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், சின்ன சின்ன ஊர்களிலும் கூட அடையாறு ஆனந்த பவன் உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான், தென்னிந்தியாவின் பிரபல உணவகமான அடையாறு ஆனந்த பவன் உணவகத்தை சுமார் ரூ.1600 கோடிக்கு போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது.

அடையாறு ஆனந்த பவன் உணவகம் தன் பெரும்பான்மையான பங்குகளை ஜேம்ஸ் முர்டேக் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் துணைத் தலைவர் உதய் சங்கரின் போதி ட்ரீ சிஸ்டம் நிறுவனத்திற்கு ரூ.1600 கோடிக்கு விற்பனை செய்து விட்டது. இதன் மூலம் A2B-யின் புதிய தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்கவிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.. விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்...