1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Maharashtra Coronal Impact Increases to 537

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 537 ஆக அதிகரிப்பு !!

Maharashtra Coronal Impact
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறதுஇதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளதுஇந்தியாவிலும் வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 3082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, மும்பையில் 28 பேருக்கும்,  தானேவில் 15 பேருக்கு புதியாக  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் 411 கொரோனா பாதிப்புகளுடன் கொரோனா பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
உலகம் முழுவதும் கொரோனாவால் 11 லட்சம் பேர் பாதிப்பு…அதிர்ச்சி தகவல்