புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (15:21 IST)

நான் திரும்ப வந்துட்டேன் சொல்லு – 55 பந்துகளில் 158 ரன்கள் அடித்து பாண்ட்யா அபாரம் !

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா டாக்டர் டி ஒய் பாட்டில் தொடரில் இரண்டாவது சதத்தை அடித்துள்ளார்.

முதுகுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இடம்பிடிக்க கடுமையாக முயற்சி செய்துவருகிறார். அதற்காக இப்போது உள்ளூர் தொடரான டாக்டர் டி ஒய் பாட்டில் தொடரில் ரிலையன்ஸ் 1 அணிக்காக விளையாடி வருகிறார்.

இதில் ஏற்கனவே ஏசிஜி அணிக்காக விளையாடிய அவர்,  37 பந்துகளில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்போது  பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிராக 55 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 20 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடக்கம். இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் அவருக்கு இடம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.