வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 4 ஏப்ரல் 2020 (15:19 IST)

உலகம் முழுவதும் கொரோனாவால் 11 லட்சம் பேர் பாதிப்பு…அதிர்ச்சி தகவல்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை11,19,993 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 59,247 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தைக் காண்போம்.
இத்தாலியில்1,19,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 861 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கொரோனா தொற்றினால், 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சீனாவில் மட்டும் 83 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 326 பேர் பலியாகியுள்ளனர்.

கொரொனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,77,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7403 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1480 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 3082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர்.