திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (16:13 IST)

அலுவலகத்தை இழுத்து மூடிய பிசிசிஐ – ஐபிஎல் அப்டேட் எப்போது ?

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தை கொரோனா வைரஸ் பீதி காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளது.

இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சொல் உண்டென்றால் கொரோனாதான். கண்ணுக்கே தெரியாத ஒரு வைரஸ் இதுவரை 5200 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 வரைத் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு கண்டிப்பாக தொடங்குமா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

பிசிசிஐ அலுவலகம் உள்ள மகாரஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.