தொடர்புடைய செய்திகள்
- முருகதாஸ் & சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?
- 10 வருடத்துக்குப் பின் டப்பிங் செய்யப்படும் ராஜமௌலி திரைப்படம்!
- வெற்றிமாறன் ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிய சூரி – அண்ணாத்த தான் காரணமா?
- மீண்டும் பூலோகம் இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி – விரைவில் அறிவிப்பு!
- மாஸ்டர் படத்துக்கு விநியோகஸ்தர்களால் வரும் சிக்கல் – என்ன செய்வார் தயாரிப்பாளர்?
மீண்டும் இரவுநேர ஊரடங்கு: எந்த மாநிலத்தில் தெரியுமா?
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. உலகம் முழுவதும் ஏற்கனவே 7 கோடிக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதும், அதில் ஒரு கோடிக்கு மேல் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேர ஊரடங்கு முதலில் தளர்த்தப்பட்டு அதன் பின் பகல் நேரத்திலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மீண்டும் இரவு நேர ஊரடங்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் அமஒபடுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அம்மாநில மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அதாவது இரவு 11 மணி முதல் 6 மணி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
இந்த அறிவிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் தாண்டி மற்ற மாநிலத்திலும் அமல்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
