செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (17:40 IST)

வெற்றிமாறன் ஷூட்டிங்கில் இருந்து கிளம்பிய சூரி – அண்ணாத்த தான் காரணமா?

வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்கில் இருந்து சூரி அண்ணாத்த படப்பிடிப்பு தளத்துக்கு கிளம்பியுள்ளார்.

சூரி இப்போது வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்துக்காக சத்தியமங்கலம் காடுகளில் படப்பிடிப்பில் இருந்தார். அங்கு அவர் இரண்டு நாட்கள் கலந்துகொண்ட நிலையில் இப்போது அங்கிருந்து ஐதராபாத்துக்குக் கிளம்பியுள்ளார். அங்கு நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

ஆனால் ஏற்கனவே அவர் அண்ணாத்த படத்துக்காக நடித்த காட்சிகளில் தாடி வைத்திருந்த நிலையில் இப்போது க்ளின் ஷேவ் லுக்கில் இருக்கிறாராம். இதனால் அதை எப்படி மேட்ச் செய்வது என்ற குழப்பத்தில் உள்ளதாம் அண்ணாத்த படக்குழு. அதனால் இப்போது சூரிக்கு ஒட்டுத்தாடி தயார் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.