வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (17:48 IST)

10 வருடத்துக்குப் பின் டப்பிங் செய்யப்படும் ராஜமௌலி திரைப்படம்!

ராஜமௌலி இயக்கத்தில் நாகார்ஜுனா நடித்த திரைப்படம் ராஜசிங்கம் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட உள்ளது.

தெலுங்கு சினிமாவில் கமர்ஷியல் கிங்காக உலாவந்து கொண்டிருந்த ராஜமௌலியை நான் ஈ திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. அதன் பின்னர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் இந்தியா முழுவதும் பிரபலமாக்கின. இதையடுத்து அவர் இப்போது ஆர் ஆர் ஆர் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ராஜமௌலி படத்துக்கு என்றே ஒரு மார்க்கெட் உருவாகி இருப்பதால் அவரின் பழைய படங்கள் ரீமேக் செய்யப்படுவதும் டப்பிங் செய்யப்படுவதும் இப்போது அதிகமாகியுள்ளது. அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் நாகார்ஜுனா மற்றும் சினேகா நடிப்பில் உருவான ராஜசிங்கம் திரைப்படம் இப்போது தமிழில் அதே பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகவுள்ளது.