செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (18:26 IST)

முருகதாஸ் & சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு - பின்னணி என்ன?

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளதாக சினிமாவட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து அவர் சில ஹீரோக்களிடம் கதை சொல்லி அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களில் நடித்த சூர்யா, முருகதாஸை அழைத்து இணைந்து ஒரு படம் பண்ணலாம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து அவர் வால்ட் டிஸ்னிக்காக ஒரு அனிமேஷன் திரைப்படத்தை எடுத்துத் தர முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த திரைப்படத்துக்கு முருகதாஸ் கதை மட்டுமே எழுதித் தருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு படம் சம்மந்தப்பட்டதா அல்லது தனிபட்ட முறையிலான சந்திப்பா எனத் தெரியவில்லை. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் கதை எழுதி தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.