1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gayathri Raguram tweet about Prasanth Kishore

பிரசாந்த் கிஷோர் மூஞ்சியில் கரிபூசுவது நிச்சயம்: பிக்பாஸ் தமிழ் நடிகை

பிரசாந்த் கிஷோ
அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பணி செய்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று காலை பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவிற்கு இரட்டை இலக்க தொகுதிகள் கூட கிடைக்காது என்றும் அக்கட்சி மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று கூறுவது நகைப்புக்குரியது என்று கூறினார் 
 
மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஒருவேளை இரட்டை இலக்க தொகுதிகளை பாஜக பிடித்து விட்டால் தான் டுவிட்டரில் இருந்து வெளியேறுவேன் என்றும் அவர் சவால் விட்டார். பாஜகவுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ள இந்த சவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:
 
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.272 சீட் வெல்வது கஷ்டம் இது அலையில்லாத் தேர்தல் என சொன்ன பிரசாந்த் கிஷோர், இப்போது மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்கை பா.ஜ.க. தாண்டாது என சொல்கிறார். 2019ல் மூஞ்சில் கரியை பூசியது போல இப்போது மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்து பிரசாந்த் கிஷோர் மூஞ்சில் மோடி, அமித் ஷா  கரியை பூசப்போகிறார்கள். அதுபோல தமிழ்நாட்டிலும் கரியை பூசுப்போகிறார்கள் சூதனமாக இருங்கள் பிரசாந்த் கிஷோர்’ என்று காயத்ரி பதிவு செய்துள்ளார்.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் இரவுநேர ஊரடங்கு: எந்த மாநிலத்தில் தெரியுமா?