செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (17:32 IST)

மீண்டும் பூலோகம் இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி – விரைவில் அறிவிப்பு!

நடிகர் ஜெயம் ரவி இப்போது பூலோகம் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதுப்படத்தில் நடிக்க உள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். ஆனால் இயக்குனருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீண்டகாலமாக முடங்கிக் கிடந்தது.

அதன் பின்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அந்த படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளார். அந்த படத்தை தற்போது பரபரப்பாக இயங்கி வரும் ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது
.