1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Gujarat girl married herself going viral

மாப்பிள்ளைலாம் வேணாம்; தன்னை தானே திருமண செய்யும் பெண்!

Kshama Bindhu
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் மனிதர்களாய் பிறந்து விட்டாலே திருமணம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. நாட்டுக்கு நாடு திருமண முறைகள் மாறினாலும், ஆணும் பெண்ணும் இணைந்து வாழ திருமணம் என்பது அடிப்படையாக உள்ளது.

இந்நிலையில் மணமகன் இல்லாமல் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார் குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர். குஜராத்தின் பரோடா பகுதியை சேர்ந்தவர் ஷாமா பிந்து. சோசியாலஜியில் பட்டப்பட்டிப்பு பெற்றுள்ள இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே திருமணம் மீது ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த ஷாமாவுக்கு மணமகள் போல அலங்காரம் செய்து கொள்வது உள்ளிட்டவை பிடித்துள்ளது. இதனால் தன்னை தானே மணந்து கொள்ள முடிவெடுத்த ஷாமா இதை தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.

இதற்கு அவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில் ஜூன் 9ம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11ம் தேதி திருமணமும் நடைபெற உள்ளதாம். இதற்கு பிறகு தேனிலவுக்கு ஷாமா கோவாவுக்கு செல்கிறாராம்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சென்னையில் நாளை முதல் மலர் கண்காட்சி