செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (17:55 IST)

சென்னையில் நாளை முதல் மலர் கண்காட்சி

சென்னையில்  நாளை முதல் மலர் கண்காட்சி
தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைக்கவுள்ளார்.

கருண நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் மலர்கண்காட்சி நடைபெறவுள்ளது.

தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏராளமான மலர்கள், மலர்களால் அமைகப்பட்ட சிற்பங்கள் காட்க்கு வைத்துள்ளனர்.

இந்த மலர்க் கண்காட்சி நாளை முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இந்தக் கண்காட்சியில் ரூ.20 ம், பெரியவர்களுக்கு ரூ.50ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.