1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Hardik patel paln to join BJP

பாஜகவில் இணையும் ஹர்திக் பட்டேல்.. காங்கிரஸுக்கு பின்னடைவா? – குஜராத்தில் பரபரப்பு!

Hardik Patel
குஜராத்தில் காங்கிரஸிலிருந்து விலகிய ஹர்திக் பட்டேல் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கடும் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை. அதை தொடர்ந்து மாநில காங்கிரஸ் வட்டாரங்களில் பலர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 2ம் தேதி ஹர்திக் பட்டேல் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நேபாள விமான விபத்து: கிடைத்தது கருப்பு பெட்டி!