திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (11:22 IST)

இன்னும் பல காங்கிரஸாரை பாஜகவில் சேர்ப்பேன்! – குண்டை தூக்கிப்போட்ட ஹர்திக் படேல்!

Hardik Patel
இன்று பாஜகவில் இணைய உள்ள ஹர்திக் படேல் மேலும் பல காங்கிரஸ்காரர்களை பாஜகவில் இணைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கடும் தோல்வியடைந்த நிலையில், சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை. அதை தொடர்ந்து மாநில காங்கிரஸ் வட்டாரங்களில் பலர் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் இன்று பாஜகவில் இணைய உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “அகில உலகத்தின் பெருமையாக பிரதமர் மோடி உள்ளார். நான் சாதாரண சிப்பாயாக பணியாற்ற உள்ளேன். காங்கிரசில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளை பாஜகவில் இணைய வைக்க 10 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்ச்சி நடத்த உள்ளோம்” என கூறியுள்ளார்.

ஹர்திக் படேலின் இந்த திட்டத்தால் குஜராத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பல பேர் கட்சி மாறலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.