1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. director ameer said cm vijay protest against need

அப்ப கர்ச்சீப் கட்டிட்டு வந்தாரு!.. இப்ப ஆளயே காணோம்!. விஜயை கலாய்த்த அமீர்!..

ameer vijay
கரப்பான் பூச்சி ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் கடந்த சில நாட்களாகவே நீட் தேர்வு எதிராக டெல்லி ஜந்தன் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பெற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய பாஜக அரசு பல வகைகளிலும் முயன்று வருகிறது. போலீசார்கள் மாணவர்களை கடுமையாக தாக்கி வருகிறார்கள்.. லத்தியால் அடிப்பது, கண்ணீர் புகை கொண்டு வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்..

ஒருபக்கம் நாடெங்கும் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக பல பிரபலங்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஒருபக்கம், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராடங்களை கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். நேற்று இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் கூட்டம் நடைபெற்றது. அதில் இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் மன்சூரலிகான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய இயக்குனர் அமீர் ‘ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெரிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. நீட் ரகசியம் தங்களிடம் இருப்பதாக கூறியவர்களும் (திமுக), அனிதா மரணத்திற்கு நேரில் சென்றவர்களும் (விஜய்) இதற்கு தீர்வு கொண்டு வரவில்லை.

கட்சி ஆரம்பிக்காத போது நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகத்தில் கர்ச்சிப் காட்டிட்டு கலந்து கொண்டார். ஆனால் கட்சி ஆரம்பிச்ச பின்னார் அவர் வரவில்லை.. அவர்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. நான் யாருக்கும் எதிரி இல்லை.. இன்னைக்கு இருக்க தவெக மைனாரிட்டி அரசாக இருந்தாலும் 108 இடத்திலே ஜெயிச்சிருக்காங்க... அதனால ஜனநாயக ரீதியாக ஆட்சியமைக்க அழைக்கணும்னு நான் குரல் கொடுத்தேன். அந்த ஜனநாயகத்தை நாங்கள் காப்பாற்றினோம். ஆனா எங்க ஜனநாயகத்தை காப்பாத்த நீங்க எங்க பக்கம் இருக்கணும்னுதான் கேட்கிறோம்’ என அவர் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இன்ஸ்டாவில் ஆடியோவை மாற்றும் புதிய வசதி!.. இனிமே டெலிட் பண்ண தேவையில்ல!...