1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP MLA's 17-Year-Old Son Missing in Jammu and Kashmir

பாஜக எம்.எல்.ஏவின் 17 வயது மகனை காணவில்லை.. 3 மாவட்டங்களில் தேடுதல் வேட்டை..

பாஜக எம்எல்ஏ மகன்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக எம்.எல்.ஏ விஜய் குமாரின் 17 வயது மகன் கதுவா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளார். 11ஆம் வகுப்பு பயிலும் மாணவரான இவர், தனது சொந்த ஊரான ஹிராநகரில் ஜம்மு செல்லும் பேருந்தில் மாலை 4:15 மணியளவில் ஏறியது முதற்கொண்டு மாயமாகியுள்ளார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதோடு, சாம்பா மற்றும் ஜம்மு பகுதிகளில் உள்ள சிசிடிவி  காட்சிகளை பல குழுக்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. 
 
மேலும், கதுவா-ஜம்மு பகுதி முழுவதும் உஷார் நிலைப்படுத்தப்பட்டு, பஞ்சாப் செல்லும் வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சிறுவனை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றாலும் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
போலி பங்கு முதலீட்டு மோசடிகள்.. முதலீட்டாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..