தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை.. நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!..
- நாளை UPSC Prelims தேர்வு.. என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
- இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி ஆசிரியர் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு..!
- JEE முதன்மை தேர்வின் முக்கிய அறிவிப்பு.. ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்?
- இன்று சிபிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு தேர்வு தொடக்கம்.. 45 லட்சம் மாணவர்கள் எழுகின்றனர்..!
அபுதாபியில் நீட் தேர்வு செண்டர்!.. ஹால் டிக்கெட்டில் குளறுபடி!.. மாணவர் ஷாக்!..
இந்தியாவில் மருத்துவராக வேண்டுமென்றால், மருத்துவ படிப்பை படிக்க விரும்பினால் 12ம் வகுப்பின் மதிப்பின் மட்டும் போதாது. மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்பு நீட் தேர்வை கொண்டுவந்தது. இதுக்கு இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்றத்தை நாடியும் நீட் தேர்வை தடுக்கமுடியவில்லை. எனவே, மருத்துவராக விரும்பும் மாணவர்கள் வேறுவழியில்லாமல் நீட் தேர்வை எழுத தயாராகி விட்டார்கள்..
கடந்த மே மாதம் 3ம் தேதி நீட் தேர்வு நடக்கவிருந்த போது வினாத்தாள் வெளியே கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தற்போது அதே தேர்வு வருகிற 21ம் தேதியான நாளை இந்தியா முழுவதும் நடக்கவுள்ளது. இந்த முறை தவறு எதுவும் நடந்த விடக்கூடாது என்று மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலம் கொண்டு போய் கொடுக்கிறார்கள். அதற்கு துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். நீட் தேர்வு எழுதுவது பிரச்சனை என்றால் ஒரு பக்கம் சம்பந்தப்பட்ட ஊரிலிருந்து பல நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு தேர்வு மையத்தை ஒதுக்கி விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் சரியான நேரத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத நிலையும் இருக்கிறது.
இந்நிலையில்தான், நாக்பூரை சேர்ந்த ஒரு மாணவர் நாளை நீட் தேர்வு எழுதவிருக்கும் நிலையில் அபுதாபியில் உள்ள ஒரு பள்ளியை அவருக்கு தேர்வு மையமாக நீட் நிர்வாகம் ஒதுக்கியிருக்கிறது. ஹால் டிக்கெட் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவர் தேசிய தேர்வு முகமையிடம் (NTA) புகார் தெரிவித்தார். இதையடுத்து இன்று மாலைக்குள் அவருக்கு புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரையில்