இன்று சிபிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு தேர்வு தொடக்கம்.. 45 லட்சம் மாணவர்கள் எழுகின்றனர்..!
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வுகள் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் தொடங்குகின்றன.
இதற்காக சிபிஎஸ்இ பாடத்திட்ட நிர்வாகம் அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் மிக கவனமாக தயார் நிலையில் வைத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எதிர்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி, சரியான நேரத்திற்கு தங்கள் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் தேர்வு அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு அறையில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், ஒழுக்கத்தை பராமரிக்கவும் நாடு முழுவதும் சிறப்புப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வினாத்தாள் கசிவு போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Edited by Siva