தொடர்புடைய செய்திகள்
- 41 பேர் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்க கூடாது: நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் முறையீடு..
- அறிவிப்பு பலகையில் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
- அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகள் பிறப்பு: ஒரு பைசா செலவில்லாமல் குழந்தை பெற்ற பெண்..
- திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...
- திமுக அவதூறு பரப்பினால் கடும் பதிலடி கொடுப்போம்: அமைச்சர் வன்னியரசு
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு.. என்ன நடந்தது?
தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு இன்று திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த எதிர்பாராத வருகை மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்குச் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் தரம் குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு தரமான மற்றும் விரைவான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை அதிகாரிகள் எவ்வித தொய்வுமின்றி உறுதி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் முதலமைச்சருடன் உடனிருந்தனர். ஏழை எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் தடையற்ற, உயர்தரச் சிகிச்சைகள் சென்றடைவதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் இந்த ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சரின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Edited by Siva
