1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. indian govt ban telegram for one week

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை.. நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!..

telegram
கடந்த சில வருடங்களாகவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ள பலரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான டெலிகிராம் செயலியை மிகவும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ் அப்பை போலவே இதிலும் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வது, ஆவணங்களை பகிர்வது என பல விஷயங்களுக்காக இந்த டெலிகிராம் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற 22 ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்திருக்கிறது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடந்த முறை நீட் தேர்வு நடைபெற்ற போது டெலிகிராம் வழியாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது..

தற்போது வருகிற 21ம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் வருகிற 22ம் தேதி வரை டெலிகிராம் (Telegram) செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தி தொடர்ச்சியாக டெலிகிராம் செயலியை யன்படுத்தி வருபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
சொன்னதை செய்த முதல்வர் விஜய்!.. நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு!..