தொடர்புடைய செய்திகள்
- 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! தேர்தலுக்கு பின்னரும் உளரும் அமைச்சர்
- 4 தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு
- பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கிரேட் காளிக்கு சிக்கல்!
- பாஜக ஆட்சி மிகவும் அபாயகரமானது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
- பிரதமர் மோடி தினமும் எத்தனை மணி நேரம் உழைக்கிறார் தெரியுமா ?
4ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இன்று காலை சரியாக 7 மணிக்கு நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
4ம் கட்ட மக்களவை தேர்தல் 9 மாநிலங்களில் மொத்தம் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரங்கள் பின்வருமாறு:
பீகார்: 5
ஜம்முகாஷ்மீர்: 1
ஜார்கண்ட்: 3
மத்தியபிரதேசம்: 6
மகாராஷ்டிர: 17
ஒடிஷா: 6
ராஜஸ்தான்: 13
உத்தரபிரதேசம்: 13
மேற்குவங்காளம்: 8
இதில் ஜம்முகாஷ்மீரில் உள்ள ஒரு தொகுதியில் மூன்றில் ஒரு பகுதியில் மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
