புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (13:30 IST)

பாஜக ஆட்சி மிகவும் அபாயகரமானது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீது குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் பாண்டுவா பகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது :
 
’’பாஜக சார்பில் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக ஆட்சிக்கு  வந்தால் நாட்டை நிச்சயமாக அழித்துவிடுவார்கள்.  மத்தியில் ஆட்சி  செய்யும் பாஜக கட்சி அபாயகரமானது.

மக்கள் பிரதமர் ஆவதை தவிர்க்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ‘’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.