வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (16:10 IST)

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கிரேட் காளிக்கு சிக்கல்!

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு வங்கதேச நடிகர்கள் பிரச்சாரம் செய்தபோது பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசா விதிமுறையை மீறி அவர்கள் பிரச்சாரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து அந்த இரு நடிகர்களும் மன்னிப்பு கேட்டு நாட்டை விட்டு வெளியேறினர்.
 
இந்த நிலையில் இதே பிரச்சனை பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த WWF வீரர் கிரேட் காளிக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கிரேட் காளியின் நண்பர் ஒருவர் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கிரேட் காளி ஓரிரு இடங்களில் பிரச்சாரம் செய்தார். மல்யுத்த வீரர் தி கிரேட் காளிக்கு மேற்குவங்கத்தில் அதிகளவு ரசிகர்கள் இருப்பதால் அவரது பிரச்சாரம் பாஜக வேட்பாளருக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது
 
ஆனால் கிரேட் காளி அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவர் மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்க கூடாது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிரேட் காளி அமெரிக்கா திரும்பிவிட்டார்.