ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (19:06 IST)

70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி! தேர்தலுக்கு பின்னரும் உளரும் அமைச்சர்

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின்போது தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பலர் உளறியதை அவ்வப்போது பார்த்தோம். மாற்று கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறுவது, சின்னத்தை மாற்றி ஓட்டு போட சொன்னது, இல்லாத சின்னத்திற்கு ஓட்டு கேட்டது என பல உளறல்களுடன் ஒருவழியாக தேர்தல் முடிந்தது
 
இந்த நிலையில் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன் 70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் இந்த தொகுதி அம்மாவின் கோட்டை என்றும் தெரிவித்தார்
 
ஒட்டப்பிடாரம் தொகுதியில் இருக்கும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 2 லட்சத்து 70 ஆயிரம் தான். ஆனால் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் கூறியது செய்தியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. 70 ஆயிரம் வாக்கு வித்தியாசம் என்று கூறுவதற்கு பதிலாக அவர் 70 லட்சம் என்று கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது