ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (13:10 IST)

பிரதமர் மோடி தினமும் எத்தனை மணி நேரம் உழைக்கிறார் தெரியுமா ?

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது 3 கட்டங்களுக்கான  தேர்தல் முடிந்துள்ளன. இன்னும் நான்கு கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் ஒடிஷா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் சுக்கிந்தா பகுதியில் நடைபெற்ற பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது :
 
இதுவரை 261 மக்களவைத் தொகுதிகளில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றதாகக் கூறினார்.
 
மேலும் நான் சென்ற இடங்களில் எல்லாம் மோடி. மோடி என்று மக்கள் மிக உற்சாகத்துடன் முழக்கமிடுவதை என்னால் கேட்க முடிந்தது. பாரத பிரதமர் மோடி நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைக்கிறார் என்று கூறினார்.