வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (21:00 IST)

ஆளுனர் பதவிக்கு ஆசைப்படும் ஓபிஎஸ்: தங்கதமிழ்ச்செல்வன் தகவல்

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்றதற்கு காரணமே தனக்கு ஆளுனர் பதவி வாங்கத்தான் என்று அமமுக பிரமுகர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுடன் வாரணாசி சென்றார். மோடி வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடனிருந்த ஓபிஎஸ், வாரணாசி தொகுதியில் தமிழர்கள் பகுதியில் அவருக்காக பிரச்சாரமும் செய்தார்
 
இந்த நிலையில் மகனுக்கு எம்பி பதவியும், தனக்கு ஆளுநர் பதவி வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளதாகவும், ஜெயலலிதா இருந்திருந்தால் ஓபிஎஸ் இவ்வாறு வாரணாசி செல்ல முடியுமா? என்றும் தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்
 
மேலும் வரும் மே 23க்கு பிறகு யாருக்கு சேர்வது உண்மையான கூட்டம் என்பது அமைச்சர்களுக்கு தெரியும் என்றும்  தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.