வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (18:50 IST)

4 தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொகுதிகளுக்கு நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி முடிவடைகிறது
 
இந்த நான்கு தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கைவிட்ட நிலையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் விபரம் இதோ:
 
திருப்பரங்குன்றம் - சக்திவேல்
 
சூலூர் - ஜி.மயில்சாமி
 
அரவக்குறிச்சி - எஸ்.மோகன்ராஜ்
 
ஒட்டப்பிடாரம் - எம்.காந்தி