1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 4 laborers killed in Haryana gas attack

ஹரியானாவில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி!

hariyana
ஹரியானா மாநிலத்தில் பஹதுர்கரில்  கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய  முயன்ற 4 தொழிலாளாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சமீப காலமாக கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் செய்திகள் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம்  நடந்துள்ளது.

ஹரியானா மா நிலம் பஹ்துர்கர் ஆலையில் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 2 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
அல்கொய்தா தலைவரை காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் அரசு ! ஏன் தெரியுமா?