செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (17:30 IST)

வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்: அரியானா அமைச்சர்

violence
வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என அரியானா அமைச்சர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன/ குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டம் ரயில் எரிப்பு போராட்டம் ஆகியவையும் நடந்துவருகின்றன. 
 
இந்த நிலையில் ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை என்றாலும் அதற்காக தீ வைப்பு மற்றும் வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் போராட்டம் குறித்து அரியானா அமைச்சர் அனில்விஜ் கருத்து தெரிவித்துள்ளார் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது