1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor vishal failed as director on magudam movie

மொத்தமா காலி!. ஒரு கோடி கூட வரலயே!.. மகுடம் முதல் நாள் வசூல் அப்டேட்!...

magudam
இதுவரை நடிகராக மட்டுமே இருந்த விஷால் மகுடம் திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். இந்த படத்தில் அஞ்சலி, துஷரா விஜயன் ஆகியோர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் விஷால் நடித்திருக்கிறார்.

இந்த படம் நேற்று தமிழகத்தில் வெளியானது. ஆனால் இந்த படம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் 3 மணி நேர நீளம் ரசிகர்களை சோதிக்கிறது. அதோடு சுவாரசியமான கதை, திரைக்கதை இல்லாததால் படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில், படம் வெளியான நேற்று இந்த படம் வெறும் 60 முதல் 68 லட்சம் வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சூர்யாவுக்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஹிட் படமாக அமைந்துவிட்டநிலையில் விஷாலுக்கு மகுடம் திரைப்படம் தோல்விப்படமாக அமைந்துவிட்டது. அதோடு, ஒரு இயக்குனராகவும் விஷால் தோற்றுப்போய்விட்டார் என கோலிவுட்டில் பேச துவங்கிவிட்டனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சுதந்திர தினவிழா ஸ்பெஷல்!.. தர்மன் புது போஸ்டர் வேற லெவல்..