1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. mansoor alikhan says his scenes removed in karuppu movie

பில்டப்பில் வாழுறீங்க!.. சூர்யாவை திட்டிய மன்சூர் அலிகான்.. காரணம் இதுதான்!..

mansoor
80களில் பல திரைப்படங்களில் குரூப் டேன்சர்களில் ஒருவராக நடனமாடியவர்தான் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல திரைப்படங்களிலும் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது காமெடி கலந்த வில்லத்தனம் செய்து வருகிறார்.

ஒருபக்கம் சினிமா விழாக்களிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் மனதுக்கு தோன்றியதை மிகவும் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் மன்சூர் அலிகான். இந்நிலையில், நேற்று ஒரு சினிமா விழாவில் பேசிய மன்சூர் அலிகான் ‘கருப்பு படத்தில் நாங்க மொத்தம் நாலு பேரு என்கிற பாடலுக்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு நடனமாடியிருந்தேன். ஆனால், படத்தில் அதை தூக்கிவிட்டார்கள். ஷூட்டிங் நடக்கும்போது என் மகனையும் அழைத்து சென்றிருந்தேன். ‘ஏம்பா நீங்க ஆடினத தூக்கிட்டாங்க’ என்று என்னை கேட்டான்.

இப்படி செய்யக்கூடாது. ஒரு கலைஞனின் மனதை புண்படுத்தக்கூடாது. நீங்கள் பல கோடி சம்பளம் வாங்குங்கள். சொத்து வாங்குங்கள். அகரம் நடத்துங்கள். என்னைப் போன்ற நடிகரின் வாழ்க்கையில் ஏன் விளையாடுகிறீர்கள்?. 1986ம் வருடத்திலேயே தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியவன் நான்’ என பேசினார்.

‘ஒரு படத்தில் காட்சிகளை நீக்குவது என்பது இயக்குனரின் முடிவு. ஆர்.ஜே.பாலாஜி செய்ததற்கு சூர்யா எப்படி பொறுப்பாக முடியும்?’ என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மொத்தமா காலி!. ஒரு கோடி கூட வரலயே!.. மகுடம் முதல் நாள் வசூல் அப்டேட்!...