நோலனின் Odyssey பட எப்படி இருக்கு?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?.. டிவிட்டர் விமர்சனம்!..
பண்டைய கிரேக்க கவிஞர் ஹேமர் எழுதிய புகழ்பெற்ற ஒடிசி என்கிற காவியத்தை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள திரைப்படம் ஒடிசி(Odyssey). மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பல ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.
போருக்கு பின் நாடு திரும்பி தனது மனைவி மற்றும் மகனை பார்க்க விரும்பும் ஒரு வீரனின் போராட்டமே இந்த படத்தின் ஒருவரிக்கதை. அவன் செல்லும் வழியில் தேவதைகள், அரக்கர்கள், கடவுள்கள் மற்றும் விசித்திரமான மனிதர்கள் அவரை தாக்குவது போலவும் காட்சி அமைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், இன்று காலையில் முதல் காட்சி பார்த்த பல ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். படம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதாகவும்.. நோலன் ஏமாற்றவில்லை எனவும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு பேண்டஸி ஆக்சன் படமாக ஒடிசி வெளிவந்திருப்பதாகவும் படத்தின் ஹீரோ Matt Damon வின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம் என பலரும் சொல்கிறார்கள்..
அதேநேரம் படம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு பிறகு கொஞ்சம் தோய்வு ஏற்படுவதாகவ்வும், அதேநேரம் கடைசி 20 நிமிடங்கள் நன்றாக இருக்கிறது, இந்த படத்திற்கு முன் Troy படத்தை பார்ப்பது நல்லது.. பார்த்தால் இன்னும் சரியாக புரியும் என்று சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
மெதுவாக நகரும் திரைப்படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் ஒடிசி படமும் உங்களுக்கு பிடிக்கும்.. வேகமான ஆக்சன் படத்தை விரும்புபவர்களுக்கு இந்த படத்தை பிடிக்காது என சிலர் சொல்கிறார்கள்.