1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. anbe diana movie getting postive response

செம ஜாலியான படம்!. அன்பே டயானா டிவிட்டர் விமர்சனம்...

anbe diana
ஜமா என்கிற படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் மீண்டும் எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் அன்பே டயானா. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானபோதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் இன்று காலை இந்த திரைப்படம் தமிழகத்தில் வெளியாகியிருக்கிறது.

இந்த படத்தில் பாரிக்கு ஜோடியாக ரம்யா நடித்திருக்கிறார். மேலும் சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில்தான், இன்று காலை முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றி டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்..

twitt

அன்பே நயனா ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருப்பதாகவும், சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் படத்தை ரசிக்க வைக்கிறார்கள் எனவும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.. ஹீரோவாகவும் இயக்குனராகவும் பாரி இளவழகன் அற்புதமாக செய்திருக்கிறார்.. ரம்யா, சேத்தன், ரோஜா, கோபி என எல்லோருக்குமே நல்ல கதாபாத்திரங்கள்.. அவர்களும் அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் இடைவேளை மற்றும் கடைசி 20 நிமிடங்கள் படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது.. யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது’ என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

twitter

குறிப்பாக சேத்தனின் நடிப்பு அற்புதமாக இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.. தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு குணசித்திர, காமெடி, வில்லன் நடிகர் சேத்தன்.. எப்படிப்பட்ட கதாபாத்திரம் வந்தாலும் அடித்து விளையாடுகிறார்.. இந்த படத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார்’ என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்..