1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ajithkumar doing movie with siruthai siva again

மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணையும் அஜித்!.. புரட்யூசர் யார் தெரியுமா?...

siruthai siva
நடிகர் அஜித் கலந்த சில வருடங்களாகவே தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். எனவே, குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் அவரின் எந்த படமும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. குட் பேட் அக்லிக்கு பின் அதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் அந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. எனவே, தானே அந்த படத்தை தயாரிப்பது என முடிவெடுத்தார். சமீபத்தில் அந்த படத்தின் அறிவிப்பும் வெளியானது. இந்த படத்திற்கு டேர் டெவில் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான், ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம். டேர் டெவில் படத்திற்கு பின் இந்த படத்தின் வேலைகள் துவங்கவிருக்கிறது. சிவா இயக்கிய அண்ணாத்த, கங்குவா ஆகிய படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை. எனவே, அவரின் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில்தான் அவருக்கு அஜித்தே மீண்டும் வாய்ப்பு கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பில்டப்பில் வாழுறீங்க!.. சூர்யாவை திட்டிய மன்சூர் அலிகான்.. காரணம் இதுதான்!..