1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. kattalan movie blue sattai maran review

புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை: காட்டாளன்' படத்தை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!

காட்டாளன்
சமீபகாலமாக இந்தியத் திரையுலகில்  பான் இந்தியா காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. புஷ்பா மற்றும் கேஜிஎப் படங்களின் பிரம்மாண்ட வெற்றியைப் பார்த்து, இன்று அறிமுகமாகும் இளம் இயக்குநர்கள் கூட தங்களது முதல் படத்தையே பான் இந்தியா அளவில் எடுக்க ஆசைப்படுகிறார்கள். அந்த வரிசையில், பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில் மற்றும் ஜெகதீஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் காட்டாளன்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் குறித்து, பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.
 
தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய அவர், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, நாங்களும் பான் இந்தியா படம் எடுக்கிறோம் என்று கிளம்பிவிட்டார்கள். புஷ்பா படத்தில் நடித்த வில்லனையும், அவரது அடியாட்களையும் அப்படியே தூக்கிக் கொண்டு வந்து இந்தப் படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று கிண்டலடித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், "சமீபகாலமாக தரமான மலையாள படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நான் பார்த்ததிலேயே ஒரு 'காட்டு மொக்கை' படம் என்றால் அது இதுதான். படம் முழுக்க கதாபாத்திரங்கள் காரணமே இல்லாமல் அங்குமிங்கும் குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டே இருக்கிறார்கள். சரி, பார்க்கப் பிடிக்கவில்லை என்று கண்ணை மூடிக்கொண்டால், இசையமைப்பாளர் தனது பின்னணி இசையால் காதைக் கிழித்து விடுகிறார் என்று விளாசியுள்ளார்.
 
இறுதியாக, இது போன்ற படங்கள் எல்லாம் தப்பித் தவறி ஓட ஆரம்பித்துவிட்டால், சினிமா ரசிகர்களைக் காப்பாற்றவே முடியாது என காட்டாளன் படத்தை ஒட்டுமொத்தமாக கிழித்துத் தொங்கவிட்டுள்ளார் மாறன்.
About Writer
பாலகிருஷ்ணன்