தொடர்புடைய செய்திகள்
- விஷ்வநாத் அண்ட் சன்ஸ் : சூர்யா பாடும் புதிய பாடல்! கென் கருணாஷ் வரிகளில் ஜி.வி.பிரகாஷ் செய்யும் மேஜிக்!
- தியேட்டரில் வசூல் வேட்டை; ஓடிடியில் சறுக்கிய கருப்பு – ஓப்பனாகப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி!
- சூர்யகுமார் யாதவ் பதவி அவுட்.. கேப்டன் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர்.. அதிரடி தொடருமா?
- வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி அனுமதி..!
- கருப்பு 10 நாட்களில் ரூ.250 கோடி! அமரன் சாதனையை முறியடிக்குமா?
விஸ்வநாத் அண்ட் கோ படத்தின் முதல் விமர்சனம் அவுட்
'கருப்பு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் விஸ்வநாத் அண்ட் கோ திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. படத்தின் தயாரிப்பாளரே படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டு இந்த அதிரடி விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி நடராஜ், இந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 14 அன்று வெளியான 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்தியது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 340 கோடிக்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த இந்தத் திரைப்படம், சூர்யாவின் மார்க்கெட் கிராஃபை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
கருப்பு படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு, சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் 'விஸ்வநாத் அண்ட் கோ'. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் சென்சேஷன் மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, சமீபத்தில் வெளியான பட்டாம்பூச்சி பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளங்களில் இளைஞர்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் இணைந்து ட்ரெண்டாகி வருகிறது.
படம் ரிலீசாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நாக வம்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார்.
அவர் பேசுகையில், நான் 'விஸ்வநாத் அண்ட் கோ திரைப்படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டேன். படம் அவுட்புட் மிகப்பிரமாதமாக வந்துள்ளது. இந்தப் படம் தியேட்டரில் 200 சதவீதம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஒரு பக்காவான கமர்ஷியல் எண்டர்டெய்னராக படம் உருவாகியுள்ளது. இது சூர்யாவின் கேரியரில் ஒரு உறுதியான வெற்றிப்படம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளரின் இந்த மாஸ் ஸ்டேட்மென்ட் சூர்யா ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.
