1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
  4. Blast tamil movie review

அதிரடி சரவெடியாக வந்ததா அர்ஜுனின் பிளாஸ்ட்? இதோ முழு அலசல்!

அர்ஜுன்
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் ராஜா இயக்கத்தில், 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பிளாஸ்ட் (Blast). பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுபாஷ் ராஜா, தனது முதல் படத்திலேயே ஒரு பக்கா கமர்ஷியல் ஆக்‌ஷன் விருந்தைப் படைத்துள்ளார்.
நாட்டின் முக்கியத் துறையில் ரூ.1000 கோடி மதிப்பிலான லஞ்ச ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகத் தொழிலதிபர் ஜான் கொக்கன் காய் நகர்த்துகிறார். இதற்காக அமைச்சருக்குப் பெருந்தொகையை கைமாற்றத் திட்டமிடுகையில், அந்தப் பணப் பரிவர்த்தனை எதிர்பாராத விதமாக ஒரு சாதாரண குடும்பத்தைப் பாதிக்கிறது.
கராத்தே மாஸ்டரான அர்ஜுனின் குடும்பம் இதில் சிக்கிக்கொள்ள, குறிப்பாக அவரது மகள் ப்ரீத்தி முகுந்தனைத் தீர்த்துக்கட்ட வில்லன் தரப்பு முயற்சிக்கிறது. அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலை ஒரு நடுத்தரக் குடும்பம் எப்படி எதிர்கொண்டது? அர்ஜுன் தனது குடும்பத்தைக் காப்பாற்ற எடுத்த விஸ்வரூபம் என்ன? என்பதே ‘பிளாஸ்ட்’ படத்தின் மீதிக்கதை.
 
 
ஆக்‌ஷன் கிங் என்ற பட்டத்திற்கு இணங்க, இந்த வயதிலும் அதே உடல்வாகு மற்றும் வேகத்துடன் சண்டைக் காட்சிகளில் மிரட்டியுள்ளார். அவரது அனுபவ நடிப்பு படத்திற்குத் தூணாக அமைந்துள்ளது.படத்தின் மிகப்பெரிய ஆச்சரியமே இவர்கள் இருவரும்தான். வழக்கமான நாயகிகளாக இல்லாமல், காருக்குள் நடக்கும் சண்டை மற்றும் கார் சேஸிங் காட்சிகளில் இருவரும் காட்டிய வேகம் தியேட்டரில் விசில் பறக்க வைக்கிறது.
 
ஜான் கொக்கன் கதாபாத்திரத்தில் இன்னும் கூடுதல் அழுத்தம் இருந்திருக்கலாம் என்று தோன்றினாலும், அர்ஜுன் சிதம்பரம், பவன் மற்றும் அவர்களது குழுவினர் மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஒவ்வொரு எலிவேஷன் காட்சியிலும் அவரது இசை ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கிறது. பீனிக்ஸ் பிரபுவின் ஸ்டண்ட் வடிவமைப்பு படத்திற்குப் பெரும் பலம். குறிப்பாக தேவையற்ற பாடல்கள் அல்லது காட்சிகள் இல்லாமல் விறுவிறுப்பாகக் கதையை நகர்த்திய ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுகள்.
 
பிளஸ்:
முதல் நிமிடம் முதல் இறுதி வரை தொய்வில்லாத திரைக்கதை.
 
பெண் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் முக்கியத்துவம்.
 
வசனங்கள் மற்றும் எலிவேஷன் காட்சிகள்.
 
மைனஸ்:
 
முன்கூட்டியே கணிக்கக்கூடிய கிளைமாக்ஸ்.
 
வில்லன் கதாபாத்திரத்தின் பலவீனம்.
 
 
சாதாரணக் கதையாக இருந்தாலும், அதைச் சொல்லிய விதத்திலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் இயக்குநர் சுபாஷ் ராஜா ஜெயித்திருக்கிறார். முதல் நாள் வசூல் மந்தமாகத் தொடங்கினாலும், நேர்மறையான விமர்சனங்களால் தற்போது பாக்ஸ் ஆபீஸில் பிளாஸ்ட்  வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. ஆக்‌ஷன் படப் பிரியர்களுக்கு இந்தப் படம் ஒரு  சூப்பர் விருந்து!
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
தனுஷ் மேலே பறந்தார்!.. D55 படத்துல ஒரு செம பாட்டு!.. ஹைப் ஏத்தும் சாண்டி மாஸ்டர்!..