1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. Warning to fishermen today

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவிப்பு

fishermen
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவித்துள்ளது. 
 
மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீன்வளத்துறை மீனவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. 
 
இந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தடையை நேற்று விலக்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவித்துள்ளது 
 
புதிதாக காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அது குறித்த உறுதியான தகவல் தெரியும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லக் கூடாது என்றும் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ள ஆலியா பட்… குழந்தை வளர்ப்பை மேற்கொள்ளும் ரன்பீர் கபூர்!